Home Featured உலகம் யூரோ; வியாழக்கிழமை ஆட்டங்கள் – இங்கிலாந்துக்காக ரூனி கோல் போடுவாரா?

யூரோ; வியாழக்கிழமை ஆட்டங்கள் – இங்கிலாந்துக்காக ரூனி கோல் போடுவாரா?

486
0
SHARE
Ad

பாரிஸ் – ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று வியாழக்கிழமை மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

மலேசிய நேரப்படி

‘பி’ பிரிவு

#TamilSchoolmychoice

இங்கிலாந்து-வேல்ஸ் (இரவு 9.00 மணி)

‘சி’ பிரிவு

உக்ரேன் – வட அயர்லாந்து (இரவு 11.55 மணி)

ஜெர்மனி – போலந்து (வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணி)

இன்றைய ஆட்டத்தின் விசேஷம் என்னவென்றால், முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் வேல்சும் மோதுவதுதான். எல்லா வகையிலும் ஒரே நாடாக இயங்கும் பிரிட்டன், காற்பந்து என்று வரும்போது மட்டும் பாரம்பரியமாக, இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து என தனித்தனியாக குழு அமைத்து விளையாடும்.

அந்த வகையில் இன்று ‘பி’ பிரிவில் இருக்கும் இங்கிலாந்து – பிரிட்டன் நாட்டின் ஒரு மாநிலப் பிரதேசமான வேல்ஸ் – இரண்டும் மோதும் சுவாரசியமான சூழ்நிலை உருவாகியுள்ளது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து ரஷியாவுடன் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டதால், இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோல்வியுற்றால் இரண்டாவது சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற முடியாத நிலைமை ஏற்பட்டு விடும்.

euro-16 june matches

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம் பிரான்சின் உள்நாட்டு நேரமாகும்.