Home Featured உலகம் 2-0 கோல்களில் ஜெர்மனியை வென்று போர்ச்சுகலைச் சந்திக்கிறது பிரான்ஸ்!

2-0 கோல்களில் ஜெர்மனியை வென்று போர்ச்சுகலைச் சந்திக்கிறது பிரான்ஸ்!

934
0
SHARE
Ad

euro-germany-france-scoreபாரிஸ் – ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான உபசரணை நாடான பிரான்ஸ், நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) ஜெர்மனியை 2-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டது.

இதன் காரணமாக, இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலைச் சந்திக்கிறது பிரான்ஸ். இதற்கு முன் 1984 மற்றும் 2000 ஆண்டுகளில் யூரோ கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள பிரான்ஸ் இந்த முறையும் வெல்லுமா – அதுவும் உபசரணை நாடு என்ற முறையில் வெற்றி பெற்று பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருமா என்பது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தெரிந்து விடும்.

euro-quarter-final-drawபந்துக்கான மோதலில் பிரான்ஸ்-ஜெர்மனி ஆட்டக்காரர்கள்…

#TamilSchoolmychoice

நேற்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் இரு கோல்களையும் கிரீஸ்மென் என்ற விளையாட்டாளர் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோலையும், இரண்டாவது பாதியில் ஒரு கோலையும் அடித்து, பிரான்சை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார் கிரீஸ்மென்.

இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் போர்ச்சுகலைச் சந்திக்கின்றது.

euro-france-win-germany-

உற்சாக வெள்ளத்தில் பிரான்ஸ் நாட்டு விளையாட்டாளர்கள்…