Home Featured உலகம் தைபே இரயிலில் குண்டுவெடிப்பு – 24 பேர் காயம்!

தைபே இரயிலில் குண்டுவெடிப்பு – 24 பேர் காயம்!

732
0
SHARE
Ad

Taipei blastதைபே (தைவான்) – தைவான் தலைநகர் தைபேயில் நேற்று இரவு இரயில் ஒன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

தைவான் நேரப்படி, நேற்று இரவு 10 மணியளவில் தைபேயின் சொங்ஷான் பகுதி இரயில் நிலையத்தில், இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த இரயில் தைபேயில் இருந்து தைவானின் வடக்குப் பகுதியான கீலுங் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் கையில் இரயில் பெட்டிக்குள் பெரிய பை ஒன்றை எடுத்து வந்து வைத்ததாகவும், அதன் பின்னர் தான் குண்டு வெடித்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.