Home உலகம் தைவான் தேர்தல் : புதிய அதிபராக ‘லாய் சிங் தே’ தேர்வு

தைவான் தேர்தல் : புதிய அதிபராக ‘லாய் சிங் தே’ தேர்வு

430
0
SHARE
Ad
தைவானின் புதிய அதிபர் லாய் சிங் தே

தைப்பே : நேற்று சனிக்கிழமை (ஜனவரி 13) நடைபெற்ற தைவான் நாட்டின் தேர்தலில் புதிய அதிபராக லாய் சிங் தே தேர்வு பெற்றார். சீனாவின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையிலும், நடப்பு துணையதிபரான அவர் தைவான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, சீனா, தைவான் இடையிலான மோதல்கள் தொடரும் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

தைவான் சீனாவின் ஒரு பகுதி என சீனா வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் நிலையில் சீனா-தைவான் இருநாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பையும் லாய் சிங் தே-யின் வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது.

டிபிபி என்னும் டெமோக்ரேடிக் புரோக்ரெசிவ் பார்ட்டி தற்போது தைவானை ஆட்சி செய்து வருகிறது. வெற்றி பெற்ற லாய் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராவார்.

#TamilSchoolmychoice

2016-இல் இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து சீனா, தைவான் மீதான அழுத்தங்களை – நெருக்குதல்களை அதிகரித்து வருகிறது. தைவானை சீனாவுடன் இராணுவத்தின் துணையோடு இணைப்போம் என தொடர்ந்து சீனா மிரட்டல் விடுத்து வருகிறது. அவ்வப்போது இருநாடுகளுக்கும் இடையிலான கடல் பகுதியில் போர் ஆயத்தப் பயிற்சிகளையும் சீனா நடத்தி வருகிறது.