Home Photo News அயலகத் தமிழர் தினம் 2024 – சரவணனுக்கு சிறந்த சமுதாய சேவைக்காக, கணியன் பூங்குன்றனார் விருது

அயலகத் தமிழர் தினம் 2024 – சரவணனுக்கு சிறந்த சமுதாய சேவைக்காக, கணியன் பூங்குன்றனார் விருது

780
0
SHARE
Ad

சென்னை : ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் மாநாடு இந்த ஆண்டும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கலந்து கொண்ட தமிழர்களின் பங்கேற்போடு ஜனவரி 11,12-ஆம் தேதிகளில் சென்னையில் சிறப்பாக நடந்தேறியது.

இந்த மாநாட்டின் மைய நிகழ்வாக அமைந்தது அனைத்துலக அளவில் பல்வேறு துறைகளில் சேவையாற்றி வரும் தமிழ் பிரமுகர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டதாகும்.

மலேசியாவின் சார்பில் ம.இ.கா துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு அவரின் சமுதாய சேவைகளைப் பாராட்டும் கௌரவிக்கும் வகையில் கணியன் பூங்குன்றனார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மேலும் சில அயலகத் தமிழ் இலக்கியவாதிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணியன் பூங்குன்றனார் விருதை சரவணனுக்கு வழங்கி சிறப்பித்தார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் உலகப் புகழ் பெற்ற தமிழ் இலக்கியக் கவிதை வரிகளைக் கொண்ட பாடலை இயற்றியவர் சங்க காலக் கவிஞரான கணியன் பூங்குன்றனார் ஆவார்.

உலகத் தமிழர்களின் சமூக மேம்பாட்டிற்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் சரவணனின் சேவைகளை கௌரவிக்கும் விதத்தில் இந்த விருது வழங்கப்பட்டது.

விருதைப் பெற்றுக் கொண்ட சரவணன், விருதைத் தனக்கு வழங்கி கௌரவித்த தமிழ் நாடு அரசாங்கத்திற்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.