Home Featured நாடு ‘பிலிப்பைன்ஸ் இயக்கங்களுக்கு 12 மில்லியன் கொடுத்தோம் – ஆனால் அது பிணைத்தொகை கிடையாது’

‘பிலிப்பைன்ஸ் இயக்கங்களுக்கு 12 மில்லியன் கொடுத்தோம் – ஆனால் அது பிணைத்தொகை கிடையாது’

1005
0
SHARE
Ad

zahidபுத்ராஜெயா – அபு சயாப் இயக்கத்தினரின் பிடியில் சிக்கியிருந்த 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க வசூலிக்கப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் நன்கொடை பிணைத்தொகையாக வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் நால்வரையும் விடுவிக்க பிணைத்தொகை வழங்கப்படவில்லை, அரசாங்கம் அது போன்ற கோரிக்கைகளுக்கு இசைந்து கொடுக்காது” என்று சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால் சிறப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட அந்த 12 மில்லியன் நன்கொடையும் பிலிப்பைன்சில் உள்ள சில இயக்கங்களுக்கு பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது” என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சாஹிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று 4 சரவாக் மாலுமிகளின் உறவினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்த போது, தாங்கள் வசூல் செய்து கொடுத்த அந்த 12 மில்லியன் ரிங்கிட் நிதி எங்கே சென்றது? என்று கேள்வி எழுப்பினர்.

காரணம், அத்தொகை பிணைத்தொகையாக வழங்கப்படவில்லை என்றால், அது சென்ற இடம் குறித்து தாங்கள் நன்கொடை அளித்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.