குப்பர்ட்டினோ – கடந்த திங்கட்கிழமை ஜூன் 13ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் குப்பர்ட்டினோ நகரில் தொடங்கிய ஆப்பிள் நிறுவன பதிவு பெற்ற மேம்பாட்டாளர் மாநாடு நாளையோடு நிறைவடைகிறது.
கடந்த திங்கட்கிழமை மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அரங்கின் முன் திரண்டிருந்த பங்கேற்பாளர்கள்…
தொடர்ந்து, 27வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்த மாநாடு உலகம் முழுவதிலும் உள்ள ஆப்பிள் நிறுவன தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்காக நடத்தப்பட்டு வரும் மாநாடாகும். புதிய தொழில்நுட்பங்கள், மென்பொருள் இயக்கங்கள் இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
உலகம் முழுவதும் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் பதிவு பெற்ற 13 மில்லியன் மேம்பாட்டாளர்கள் இருக்கின்றனர்.
இவர்களில் முதலில் பதிவு செய்தவர்கள், வட்டார ரீதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என 5,000க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இவர்கள் 74 நாடுகளில் இருந்து வந்தவர்களாவர்.
கலந்து கொண்டவர்களில் 72 சதவீதத்தினர் முதன் முறையாகப் பங்கு பெறுபவர்களாவர்.