Home Featured தமிழ் நாடு சுவாதி படுகொலை: ஒய்ஜி.மகேந்திரனின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார்!

சுவாதி படுகொலை: ஒய்ஜி.மகேந்திரனின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார்!

1215
0
SHARE
Ad

YG.Mahendranசென்னை – கடந்த வாரம் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பெண் பொயியலாளர் சுவாதி மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தன்மூப்பாகக் கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.

சுவாதியைக் கொடூரமாகக் கொலை செய்த அந்த நபரைக் காவல்துறை கண்டறிய தீவிரமான விசாரணைகள் நடத்தி வரும் நிலையில், நேற்று ஒய்ஜி.மகேந்திரன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த கருத்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

காரணம் இஸ்லாமியர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் தான் கொலை செய்தது போல் கருத்துத் தெரிவித்திருந்த அவர், சுவாதி ஒரு பிராமணப் பெண் என்பதால் தான் யாரும் குரல் கொடுக்கவில்லை. அதே ஒரு தலித் பெண்ணாக இருந்திருந்தால் இந்நேரம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருப்பார்கள் என்று தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, நேற்று முதல் அவருக்கு எதிராக நட்பு ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய அப்பதிவை நீக்கிய அவர், “சுவாதியின் கொடூரக் கொலை குறித்து தமிழில் வந்த அந்தத் தகவலை எழுதியது நான் இல்லை. நான் அந்தக் கருத்துக்களுடன் உடன் பட்டதால் அதனைப் பகிர்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம், ஒய்ஜி.மகேந்திரனின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

“சுவாதி கொலை தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஒய்.ஜி மகேந்திரன், கொலையாளி என்று குறிப்பிட்டு பேஸ்புக்கில் ஒரு இஸ்லாமியரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். இது மத துவேசத்தை தூண்டும் விதமாக உள்ளது. எனவே, ஒய்.ஜி மகேந்திரனை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.