Home Featured கலையுலகம் ‘சுவாதி கொலை வழக்கு’ படத்திற்கு தடை கோரி சுவாதியின் தந்தை புகார்!

‘சுவாதி கொலை வழக்கு’ படத்திற்கு தடை கோரி சுவாதியின் தந்தை புகார்!

1062
0
SHARE
Ad

Suvathimurdercasemovieசென்னை – சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியரான சுவாதி, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த வேளையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர் சில மாதங்கள் பரபரப்பாகப் பேசப்பட்ட இவ்வழக்கு அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போனது.

#TamilSchoolmychoice

இன்று வரை சுவாதி மரணத்திலும், சிறையில் இராம்குமார் இறந்த சம்பவத்திலும் மர்மமே நீடித்து வருகின்றது.

இதனிடையே, சுவாதி கொலை வழக்கை, இயக்குநர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் என்பவர் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியிருக்கிறார். அத்திரைப்படத்தின் முன்னோட்டம் சில தினங்களுக்கு முன்பு யுடியூப்பில் வெளியானது.

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கும் படி சுவாதியின் தந்தை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

தங்களிடம் முன்அனுமதி பெறாமல் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கின்றனர் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருக்கும் இத்திரைப்படம் வெளியானால், தங்களது குடும்பம் மனதளவில் பாதிக்கப்படும் என்றும் சுவாதியின் தந்தையான சந்தான கிருஷ்ணன் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.