Home Featured கலையுலகம் காஷ்மோரா கதாப்பாத்திரமாகவே மாறிப் போன கார்த்தி!

காஷ்மோரா கதாப்பாத்திரமாகவே மாறிப் போன கார்த்தி!

673
0
SHARE
Ad

p6aகோலாலம்பூர் – முதலில் பார்த்தவுடன் இந்தப் படத்தில் இருப்பது நடிகர் கார்த்தி என்று சட்டென அறிந்து கொள்வது கஷ்டம். அந்த அளவிற்கு காஷ்மோரா கதாப்பாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறார்.

‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற காமெடி படத்தை இயக்கிய கோகுல் தான், கார்த்தியை வைத்து ‘காஷ்மோரா’ திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

p6cசெய்வினை வைப்பது, எடுப்பது போன்ற பிளாக்மேஜிக் அமானுஷ்யங்கள் தான் கதைக்களமாம். இப்படத்தில் கார்த்தி காஷ்மோரா, ராஜ்நாயக் என மொத்தம் மூன்று கதாப்பாத்திரங்கள் ஏற்றிருக்கிறார். அந்தக் கதாப்பாத்திரங்களில் எங்குமே கார்த்தி தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக உடை, ஒப்பனை ஆகியவற்றில் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.

#TamilSchoolmychoice

கார்த்திக்கு மொத்தம் 47 விதமான ஒப்பனைகள் செய்யப்பட்டு, அதிலிருந்து மூன்று ஒப்பனைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

p6dவரலாற்றுப் பூர்வ கதையான இப்படத்தில் நயன்தாதாரா ‘ரத்தின மகாதேவி’ என்ற கதாப்பாத்திரத்தில் இளவரசியாக நடித்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.