Home Featured தமிழ் நாடு கருணாநிதி உட்பட 9 பேருக்கு சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் தடையில்லை!

கருணாநிதி உட்பட 9 பேருக்கு சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் தடையில்லை!

708
0
SHARE
Ad

karunanidhi-1(C)சென்னை – தமிழக சட்டமன்றத்தில் நேற்று அமளியில் ஈடுபட்ட, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 80 திமுக உறுப்பினர்கள், வலுக்கட்டாயமாக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்காத, திமுக தலைவர் மு.கருணாநிதி உட்பட 9 திமுக உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் கலந்து கொள்ளத் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கருணாநிதி (திருவாரூர்) கே.என்.நேரு(திருச்சி மேற்கு), ஆர் காந்தி (ராணிப்பேட்டை), பூங்கோதை(ஆலங்குளம்), ஐ.பெரியசாமி(ஆத்தூர்), எம்-ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி), எம்.கே.மோகன்(அண்ணா நகர்) க.அன்பழகன்(கும்பகோணம்), ம.ராமச்சந்திரன்(ஒரந்தநாடு) உள்ளிட்ட 9 பேர் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் வரும் 22ம் தேதி (திங்கட்கிழமை) திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.