Home Featured நாடு முக்குளிப்பு: 2 மலேசிய வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு

முக்குளிப்பு: 2 மலேசிய வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு

616
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்சில் 10 மீட்டர் உயரத்தில் இருந்து முக்குளிக்கும் (‘டைவிங்’) போட்டியில்  இன்று வியாழக்கிழமை மலேசிய நேரம் இரவு 10.40 மணியளவில் நடைபெற்று முடிந்த அரை இறுதிப் போட்டியில் இரண்டு மலேசியப் பெண்களும் தேர்வாகியுள்ளனர்.

பங்கு பெற்றவர்களில் முதல் 12 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறுவார்கள் என்ற நிலையில் மலேசியாவின் பண்டலீலா ரினோங் 6-வதாக தேர்வு பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். ஏற்கனவே சியோங் ஜுன் ஹூங் மற்றும் பண்டெலெலா ரினோங் இருவரும் இணைந்த ஜோடி இரட்டையர் முக்குளிப்பு போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர் என்பதும், இந்த முறை மலேசியா பெற்ற முதல் பதக்கம் அதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மற்றொரு மலேசியப் போட்டியாளரான நூர் டபிதா சப்ரி 11-வதாக வந்து, அவரும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றாறார்.

12 பேர் பங்கு கொள்ளும் முக்குளிப்பு போட்டிக்கான இறுதிச் சுற்றில் 2 மலேசியர்களும் தேர்வு பெற்றுள்ளதால், இருவரில் ஒருவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.