Home Featured இந்தியா ‘கேல் ரத்னா’ விருது விளையாட்டாளர்களுடன் நரேந்திர மோடி!

‘கேல் ரத்னா’ விருது விளையாட்டாளர்களுடன் நரேந்திர மோடி!

1228
0
SHARE
Ad

narendra modi - khel ratna awardees

புதுடில்லி – ஒலிம்பிக்சில் பதக்கங்கள் பெற்றவர்களுக்கும் சிறந்த முறையில் தங்களின் திறனை வெளிப்படுத்தியவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ‘கேல் ரத்னா’ (KHEL RATNA) என்ற விளையாட்டாளர்களுக்குரிய உயரிய விருதை வழங்கி கௌரவித்தார். மேலே படம்: மோடியுடன் இடமிருந்து வலமாக – ஜித்து ராய் (துப்பாக்கி சுடுதலில் திறனை வெளிப்படுத்தியவர்), பிவி.சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாக்கார்

narendra modi-pv sindhu

#TamilSchoolmychoice

பின்னர் மோடி ஒவ்வொரு விளையாட்டாளருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவர்களிடம் அளவளாவினார். பூப்பந்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பி.வி.சிந்தவுடன் நரேந்திர மோடி.

narendra modi-sakshi malik

பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்குடன் மோடி…

narendra modi-dilip karmakar

மிக பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள எளிமையான குடும்பம் ஒன்றில் இருந்து வந்த தீபா கர்மாக்கார், ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அபார திறனை வெளிப்படுத்தினார். ஆனால் பதக்கம் பெறவில்லை. அவருக்கும் கேல் ரத்னா வழங்கப்பட்டது. அவருடன் மோடி..

மேலும் இந்தியாவில் விளையாட்டுத் துறையில் பல்வேறு முனைகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கும், கடந்த காலங்களில் இந்திய விளையாட்டுத் துறைக்கு அளப்பரிய பணியாற்றியவர்களுக்கும் மோடி விருதுகள் அளித்து கௌரவித்துள்ளார்.

அடுத்தடுத்த ஒலிம்பிக்சில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம், விளையாட்டாளர்கள் தயார்ப்படுத்தப்படுவார்கள் என்று நேற்று வானொலியில் தான் ஆற்றிய மாதாந்திர உரையில் மோடி உறுதியளித்தார்.

(படங்கள்: நன்றி – நரேந்திர மோடி டுவிட்டர் பக்கம்)