Home Featured இந்தியா மனைவியின் சடலத்தைச் சுமந்த கணவருக்கு பஹ்ரைன் பிரதமர் உதவி!

மனைவியின் சடலத்தைச் சுமந்த கணவருக்கு பஹ்ரைன் பிரதமர் உதவி!

762
0
SHARE
Ad

odisaபுதுடெல்லி – இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில், இறந்த மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு 12 கிமீ வரை நடந்த பழங்குடியினத்தவரான தனா மாஜியின் நிலையைக் கண்டு வருந்திய பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா, அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

தனா மாஜியின் விவரங்களைக் கண்டறியுமாறு பஹ்ரைனிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் கேட்டுள்ள பஹ்ரைன் பிரதமர், அவருக்கு நிதியுதவி செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், எவ்வளவு நிதியுதவி செய்யவுள்ளார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

காசநோயால் இறந்த தனது மனைவியின் சடலத்தை எடுத்துச் செல்ல, சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளார் தனா மாஜி, ஆனால் மருத்துவமனையோ அவர் எவ்வளவோ கெஞ்சியும் மறுத்துவிட, வேறுவழியின்றி மனைவியின் உடலை தனது தோளில் சுமந்தபடி, நடந்தார் தனா மாஜி.

#TamilSchoolmychoice

இந்தத் தகவல் ஊடகங்களுக்குத் தெரிந்த பின்னர், பரபரப்பாகப் பேசப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வட்டார கலெக்டர் தலையிட்டு, தனா மாஜிக்கு உதவினார்.

எனினும், இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம், நட்பு ஊடகங்கள் வாயிலாக உலகம் முழுவதும் பரவியது குறிப்பிடத்தக்கது.