Home Featured நாடு செப் 1 முதல் மலேசியக் கடப்பிதழ்களை இணையம் வழியாகப் புதுப்பிக்கலாம்!

செப் 1 முதல் மலேசியக் கடப்பிதழ்களை இணையம் வழியாகப் புதுப்பிக்கலாம்!

662
0
SHARE
Ad

malaysian-passport

ஜோகூர் பாரு – மலேசியக் கடப்பிதழ்களை, இணையம் மூலமாக வழங்கும் புதிய திட்டத்தின் கீழ், நான்கு மாநிலங்களையும், இரண்டு நகர்புற உருமாற்று மையங்களையும் (Urban Transformation Centres) தேர்ந்தெடுத்துள்ளது மலேசியக் குடிநுழைவு இலாகா.

இத்திட்டம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல், செயல்பாட்டிற்கு வருகின்றது.

#TamilSchoolmychoice

அதன் படி, பகாங், சரவாக், பினாங்கு மற்றும் புத்ராஜெயா ஆகிய நான்கு மாநிலங்களும், கோலாலம்பூர் புடு செண்டரல் மற்றும் ஜோகூர் கோத்தாராயா ஆகிய இரண்டு யுடிசி-களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றில் இச்சேவை வழங்கப்படும் என குடிநுழைவு இலாகாவின் பொது இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபர் அலி தெரிவித்துள்ளார்.

“கடப்பிதழ்களைப் புதுப்பிக்க இணையம் மூலமாக விண்ணப்பம் செய்பவர்கள், கால நேரமின்றி, எவ்விடத்திலிருந்தும், செல்பேசிகளின் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பதாரர்கள், இந்த நான்கு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் தங்களது கடப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் விண்ணப்பம் செய்யலாம். உதாரணமாக, ஜோகூரில் இணைய விண்ணப்பம் செய்யும் ஒரு நபர், பினாங்கிலுள்ள குடிநுழைவு இலாகாவில் தனது கடப்பிதழைப் பெறலாம்” என்று முஸ்தாபர் அலி தெரிவித்துள்ளார்.

‘மைஆன்லைன் பாஸ்போர்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் படி, மலேசியர்கள் தங்களது விவரங்களை இணையம் மூலமாக அனுப்பி, தங்களது புகைப்படங்களை இணைத்து, கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளின் மூலமாக கட்டணம் செலுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் தங்களது கடப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது சோதனை முயற்சியாக நான்கு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் விரைவில் மற்ற மாநிலங்களில் அமலுக்கு வரலாம்.