Home Featured உலகம் சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பில் 41 பேர்!

சிங்கப்பூரில் ஜிக்கா வைரஸ் பாதிப்பில் 41 பேர்!

756
0
SHARE
Ad

singapore480

சிங்கப்பூர் – தூய்மைக்கும், சுகாதார நலன்களைப் பேணுவதிலும் முதன்மை வகிக்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலேயே இதுவரை ஜிக்கா வைரஸ் எனப்படும் தொற்றுநோய்க் கிருமிகள் கொண்ட 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் உள்நாட்டிலேயே பரவிய தொற்றுநோய்க் கிருமிகள் என்பதோடு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கட்டுமானத் துறைகளில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இவர்களில் அனைவரும் குணமடைந்துள்ளனர் என்றும் இன்னும் ஏழு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சிங்கப்பூர் அரசின் தேசிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் வசிக்கும் மேலும் பலர் இந்த தொற்று நோயைக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

மலேசிய-சிங்கப்பூர் எல்லைச் சோதனைச் சாவடிகளில் மருத்துவ பரிசோதனைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரின் தென்கிழக்கு பகுதியில் வசிக்கும் 47 வயதான மலேசியப் பெண்மணி ஒருவருக்கு ஜிக்கா தொற்று நோய் இருப்பது முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பகுதிகளில் சுமார் 124 பேரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் பலருக்கு இந்த தொற்று நோய் இருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் கட்டுமானத் தொழிலாளர்கள் வசிக்கும் உறைவிடங்கள் மூடப்பட்டுள்ளன.

பிரேசில் நாட்டில் ஓர் அரிய தொற்றுநோய்க் கிருமியாக முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொற்று நோய்க் கிருமிகள் தற்போது பல நாடுகளில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.