Home Featured நாடு கிர் தோயோவுக்கு இரண்டாவது திருமணம்!

கிர் தோயோவுக்கு இரண்டாவது திருமணம்!

784
0
SHARE
Ad

Khir-Toyo-Featureகோலாலம்பூர் – சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர் தோயோ, கிரிஸ்டின் ஜானித்ரா அப்துல்லா என்ற 39 வயதுப் பெண்மணியை இன்று இரண்டாவது திருமணம் புரிந்துள்ளார்.

ஜானித்ரா (படம்) புத்ரா ஜெயாவில் பணிபுரிந்து வரும் ஓர் அரசாங்க ஊழியராவார். அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்.

zanithra-khir toyo 2nd wife

#TamilSchoolmychoice

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகிவிட்ட கிர் தோயோவின் திருமணம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை இருப்பினும் அவர் இரண்டாவதாக மணந்துள்ள ஜானித்ராவின் புகைப்படங்கள் இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

கிர் தோயோ ஒரு பல் மருத்துவராவார்.  அவரது முதல் மனைவி ஜாஹாரா கிச்சிக்கை அவர் 1990-ஆம் ஆண்டில் திருமணம் புரிந்து அவர்களுக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்தத் தகவலை பெர்னாமா வெளியிட்டுள்ளது