Home Featured இந்தியா சச்சின் கொடுத்த காரைத் திரும்ப ஒப்படைத்த ஒலிம்பிக் வீராங்கனை!

சச்சின் கொடுத்த காரைத் திரும்ப ஒப்படைத்த ஒலிம்பிக் வீராங்கனை!

996
0
SHARE
Ad

dipa-karmakar-to-return-her-bmwபுதுடெல்லி – ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியதற்காக, ஐதராபாத் பூப்பந்து சங்கம் சார்பில், சச்சின் டெண்டுல்கர் கையால் பிஎம்டபிள்யூ காரைப் பரிசாகப் பெற்ற தீபா கர்மாகர், அக்காரை அச்சங்கத்திடமே திருப்பிக் கொடுத்துள்ளார்.

பராமரிப்பு பிரச்சினைகள் காரணமாக அவர் அக்காரைத் திரும்பக் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது.

தீபா வசிக்கும் அகார்தாலா என்ற பகுதியில் பிஎம்டபிள்யூ கார் பராமரிப்பு சேவைகள் குறைவாக இருப்பதாலும், அங்கு ஆடம்பரக் கார் செல்லக்கூடிய அளவில் தரமான சாலைகள் இல்லாததாலும் அவர் தனது காரைத் திரும்ப அளித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice