Home Featured கலையுலகம் ‘மகளிர் மட்டும்’ – அடுத்த படத்திற்குத் தயாராகும் ஜோதிகா!

‘மகளிர் மட்டும்’ – அடுத்த படத்திற்குத் தயாராகும் ஜோதிகா!

1262
0
SHARE
Ad

magalir_mattum_3040890f

சென்னை – சூர்யா தயாரிப்பில் அவரது மனைவி ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு ‘மகளிர் மட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா இப்படத்தை இயக்குகிறார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே இந்தத் தலைப்பு கமல்ஹாசன் தயாரிப்பில் படமாக வந்துள்ளதால், அத்தலைப்பைப் பயன்படுத்த அவரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு கமலும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜோதிகா ஆவணப்பட இயக்குநர் கதாப்பாத்திரத்தில் வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் இப்படத்தில் ஜோதிகாவுடன் நாசர், லிவிங்ஸ்டன், பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘காக்கா முட்டை’ மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.