Home Featured உலகம் இந்தோனிசியா சென்ற கத்தார் விமானத்தின் கழிவறையில் சிசுவின் சடலம்!

இந்தோனிசியா சென்ற கத்தார் விமானத்தின் கழிவறையில் சிசுவின் சடலம்!

982
0
SHARE
Ad

indonesiaஜகார்த்தா – இந்தோனிசியா சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் கழிவறையில், சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜகார்த்தாவில் அவ்விமானம் நின்றவுடன், கழிவறையைச் சுத்தம் செய்வதற்காக துப்புறவாளர்கள் சென்ற போது அங்கு சிசுவைக் கண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஜகார்த்தா காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இதனிடையே, அவ்விமானத்தில் வந்த இந்தோனிசியா பெண் மீது காவல்துறையின் சந்தேகம் திரும்பியுள்ளது.

அப்பெண் விமானத்தில் சிசுவைப் பெற்றெடுத்தாரா? அல்லது வேறு எங்காவது பெற்றெடுத்து விமானத்தில் கொண்டு வந்து போட்டாரா? என்பது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.