Home Featured நாடு அக் 17-ல் சிலாங்கூரில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அக் 17-ல் சிலாங்கூரில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

1059
0
SHARE
Ad

Rough-seas-கோலாலம்பூர் – வரும் அக்டோபர் 17-ம் தேதி சிலாங்கூர் கடற்பகுதிகளில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைக் காட்டிலும், மிகப் பெரிய பேரலைகள் நவம்பர் மாதம் ஏற்படும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய விண்வெளி முகமை ஆராய்ச்சி அதிகாரி மொகமட் ரிட்சுவான் தாகார் கூறுகையில், வரும் அக்டோபர் 17-ம் தேதி, பூமிக்கு மிக அருகில் நிலவு வருவதால், கடலில் பேரலைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால், வரும் நவம்பர் 14-ம் தேதி தான் பூமிக்கு மிக அருகில் நிலவு வருகின்றது. அப்போது இன்னும் கூடுதலாக மிகப் பெரிய பேரலைகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.