கோலாலம்பூர் – சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் தாயார் ஹஜ்ஜா சே தோங் யஹாயா (வயது 83) இன்று சனிக்கிழமை அதிகாலை 2.14 மணியளவில் கேபிஜே டாமன்சாரா சிறப்பு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பக்கவாதம், நுரையீரல் தொற்று நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
இந்நிலையில், அம்பாங்கிலுள்ள தாமான் டார், மஜ்சித் டாருல் ஈசானிற்கு அவரது நல்லுடல் எடுத்து வரப்பட்டு, அங்கு சடங்குகள் நடத்தப்பட்டு, பின்னர் உலு கிள்ளானில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவிருக்கிறது.