சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒன்று கூடினர்.
அவர்களைச் சந்தித்த கமல், ரசிகர் மன்ற நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தார்.
சுமார் 3 மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில், தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அப்போது நிர்வாகிகளில் பலர், கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகின்றது.
ஆனால், அதனை மறுத்த கமல், வாக்களித்து நமது கடமையைச் செய்வதோடு நிறுத்திக் கொள்வோம். வாக்குக்கேட்டு செல்லும் வேலையெல்லாம் நமக்குச் சரி வராது என்று கூறியிருக்கிறார்.
அதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகிகள், நற்பணி மன்றங்கள் மூலமாக இன்னும் என்னென்ன புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனைப் பெற்றிருக்கின்றனர்.