இலண்டன் – கடந்த வாரம் இலண்டனில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் நாடுகளின் உச்சமன்றத் தலைவர்களுக்கான மாநாட்டில் மலேசியக் குழுவுக்குத் தலைமை தாங்கியும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதிநிதித்தும் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
அந்த மாநாட்டின் இடைவேளையிலும், மாநாடு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே ஆகியோரையும் மற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களையும் விக்னேஸ்வரன் சந்தித்தார்.
காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி எலிசபெத் மகாராணியார் தனது பக்கங்ஹாம் அரண்மனையில் விருந்துபசரிப்பு நடத்தி அவர்களை கௌரவித்தார்.
அந்த விருந்துபசரிப்பின்போது எலிசபெத் மகாராணியாரையும் விக்னேஸ்வரன் சந்தித்தார்.