Home நாடு பெர்சாத்து கட்சி மீதான சங்கப் பதிவிலாகா முடிவுக்கு இடைக்காலத் தடை!

பெர்சாத்து கட்சி மீதான சங்கப் பதிவிலாகா முடிவுக்கு இடைக்காலத் தடை!

1006
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துன் மகாதீர் – டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சியின் பதிவு தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக சங்கப் பதிவிலாகா முடிவு எடுத்து அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த முடிவுக்கு எதிராக பெர்சாத்து கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

அந்த வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், வழக்கின் முழு விசாரணை முடியும் வரையில், சங்கப் பதிவிலாகாவின் முடிவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு வழங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெர்சாத்து கட்சியின் சின்னங்களும் கொடிகளும் பயன்படுத்தப்படுவதில் தடை ஏதும் இருக்காது எனக் கருதப்படுகிறது.

பெர்சாத்து கட்சி இனி வழக்கம்போல் பொதுத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் என்றும் அதன் தலைவர் மொகிதின் யாசின் தெரிவித்திருக்கிறார்.