Home தேர்தல்-14 தீபகற்ப மலேசியாவில் 6 மாநிலங்களைக் கைப்பற்றி விட்டோம் – மகாதீர்

தீபகற்ப மலேசியாவில் 6 மாநிலங்களைக் கைப்பற்றி விட்டோம் – மகாதீர்

926
0
SHARE
Ad

லங்காவி தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் தலைநகர் திரும்பி பெட்டாலிங் ஜெயா ஷெராட்டன் தங்கும் விடுதியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த துன் மகாதீர் தீபகற்ப மலேசியாவில் 6 மாநிலங்களை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றி விட்டதாக அதிகாரபூர்வமற்ற முறையில் அறிவித்தார்.

கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான்,  ஜோகூர் ஆகிய 6 மாநிலங்களே இதுவரையில் பக்காத்தான் கைப்பற்றியிருக்கும் 6 மாநிலங்களாகும்.

இதற்கிடையில் சபா மாநிலத்திலும் வாரிசான் கட்சி, பிகேஆர், ஜசெக இணைந்த கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.