Home தேர்தல்-14 1எம்டிபி நடவடிக்கைக் குழு பணிகளைத் தொடக்குகிறது

1எம்டிபி நடவடிக்கைக் குழு பணிகளைத் தொடக்குகிறது

862
0
SHARE
Ad
அபு தாலிப் ஒத்மான்

புத்ரா ஜெயா – 1எம்டிபி விவகாரங்கள் குறித்து புலனாய்வுகள் நடத்த புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு நடவடிக்கைக் குழு தனது பணிகளை இன்று செவ்வாய்க்கிழமை (22 மே) தொடக்குகிறது. தனது முதல் கூட்டம் இன்று நடைபெறும் என்றும் அந்தக் குழு அறிவித்திருக்கிறது.

பிரதமர் அலுவலகம் இந்தப் புதியக் குழுவை நேற்று திங்கட்கிழமை நியமித்திருக்கிறது.

முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபு தாலிப் ஒத்மான் இந்தக் குழுவுக்குத் தலைமையேற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தக் குழுவில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அபு காசிம் முகமட், அந்த ஆணையத்தின் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல், காவல் துறையின் சிறப்புப் படையின் முன்னாள் துணை இயக்குநர் டத்தோ அப்துல் ஹமிட் பாடோர் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

துன் டாயிம் தலைமையிலான மூத்த மேதகையாளர்களின்  ஆலோசனை மன்றத்தின் (Council of Eminent persons) கீழ் இந்த 1எம்டிபி நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
தனது தலைமையிலான நடவடிக்கைக் குழு நியாயமாகவும் சட்டப்படியும், புலனாய்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அபு தாலிப் உறுதியளித்துள்ளார்.