Home தேர்தல்-14 நஜிப்: கைப்பற்றியதோ 72 பெட்டிகள்-எண்ணி முடித்ததோ 11 பெட்டிகள் மட்டுமே!

நஜிப்: கைப்பற்றியதோ 72 பெட்டிகள்-எண்ணி முடித்ததோ 11 பெட்டிகள் மட்டுமே!

1186
0
SHARE
Ad
பெவிலியன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் பெட்டிகளில்…

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் 72 பெட்டிகள் ரொக்கப் பணத்தோடும், ஆபரணங்களோடும் கைப்பற்றப்பட்டதாக வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங் அறிவித்திருந்தார்.

அந்தப் பெட்டிகளில் உள்ள பணத்தை எண்ணத் தொடங்கியுள்ள காவல் துறை அதிகாரிகள் இதுவரையில் 11 பெட்டிகளில் உள்ள பணத்தை மட்டுமே எண்ணி முடித்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாவற்றையும் எண்ணி முடிக்கும்போது, பல மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பணம் அந்தப் பெட்டிகளில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.