கோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மைநாடி அறவாரியத்தின் தலைவர் டத்தோ டாக்டர் ஜெயேந்திரன் டான்ஸ்ரீ சின்னதுரை கலந்துக் கொள்ள உள்ளார்.
தகவல் தொடர்பு தொழில்நுட்ப புதிர்ப்போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, இருபரிமாண அசைவூட்டப் போட்டி, ஸ்க்ராட்ச் எனும் நிரலாக்கம், வடிவமைத்தல் போட்டி என ஐந்து விதமான போட்டிகளுக்கான இறுதிச்சுற்று நாளை நடைபெறவுள்ளது.
ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் நாடு தழுவிய அளவில் ஏறக்குறைய 299 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்குபெறுகிறார்கள். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொள்ளவும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் இப்போட்டியை ஒவ்வோராண்டும் தித்தியான் டிஜிட்டல் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.