Home One Line P2 செனாவாங் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவம் திறப்பு விழா

செனாவாங் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவம் திறப்பு விழா

1495
0
SHARE
Ad

சிரம்பான் – தேசிய வகை செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் , பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி அறவாரியம் ஏற்பாட்டில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவம் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை பிப்ரவரி 20-ஆம்  (வியாழக்கிழமை) மாலை மணி 4.30 சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு
சிறப்பு வருகையாளராக இளமாறன் முருகையா (மைநாடி நிறுவனத்தின் அறங்காவலர்) கலந்து சிறப்பித்தார்.

2013 முதல் தித்தியான் டிஜிட்டல் பாடத்திட்டதின் வழி இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இப்பள்ளி மாணவர்கள் பள்ளி, மாநிலம் மற்றும் தேசிய ரீதியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டிகளில் பங்கேற்று வாகை சூடியுள்ளனர்.

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக இத்துறையில் மாணவர்களின் பங்கேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

#TamilSchoolmychoice

தற்போது “யாயாசான் மைநாடி” (Yayasan MyNadi) கொடையளிப்பில் தித்தியான் டிஜிட்டல் ஆதரவுடன் OS edubuntu மற்றும் Windows என இருவகை இயங்கு தளங்கள் இப்பள்ளி தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவம் கொண்டுள்ளது என்பதை இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மோகன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நடுவம் பல தரப்பினர்களின் உதவியால் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும் தொடர்ந்து செயல்படுவதற்கு அனைவரும் ஒன்று சேர்வோம் என்றும் மோகன் மேலும் குறிப்பிட்டார்.