Home One Line P1 “பதவி விலகலைப் பற்றி நானே முடிவு செய்வேன்!”- துன் மகாதீர்

“பதவி விலகலைப் பற்றி நானே முடிவு செய்வேன்!”- துன் மகாதீர்

656
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதா இல்லையா என்பதை தாம் முடிவு செய்ய இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சமாநாட்டிற்குப் பிறகு பதவி விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

“அதிகார மாற்றம் என்பது ஏபெக் மாநாட்டுக்குப் பிறகு நடக்கும் என்று நான் கூறியுள்ளேன். நேரம் தேதி இல்லை, எதுவும் இல்லை (அமைக்கப்படவில்லை).”

“போகலாமா வேண்டாமா என்பது என் விருப்பம். அதுதான் அவர்கள் எனக்குக் கொடுத்த நம்பிக்கை. கடவுளுக்கு நன்றி, ”என்று அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு கூட்டத்திற்கு முன்பதாக இரு வெவ்வேறு கருத்துக்கள் இருந்தததை டாக்டர் மகாதீர் ஒப்புக்கொண்டார்.

கட்சியின் நலன்களுக்காக கூட்டம் முழுவதும் ‘நீண்ட விவாதங்கள்’ நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“இறுதியில் நான் பெருமிதம் அடைந்தேன், எல்லாமே என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் சொல்வதை அவர்கள் கேட்பார்கள்” .

“நான் மகிழ்ச்சியடைகிறேன், அவர்கள் இறுதியாக என் மீது நம்பிக்கை வைத்தார்கள்,” என்று அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களான பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், அமனா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங்கும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

முன்னதாக, பிப்ரவரி 13-ஆம் தேதி, அன்வார் டாக்டர் மகாதீரை சந்தித்த பின்னர் பதவி மாற்றம் தொடர்பான பிரச்சனை விவாதிக்கப்பட்டு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நவம்பர் மாதம் ஆசிய பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டைத் தொடர்ந்து பிரதமர் பதவியை விட்டு விலகுவதாக வலியுறுத்தியிருந்தார்.