Home கலை உலகம் அஸ்ட்ரோவில் மேலும் 2 புதிய எச்.டி அலைவரிசைகள்

அஸ்ட்ரோவில் மேலும் 2 புதிய எச்.டி அலைவரிசைகள்

1340
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஏற்கனவே விண்மீன் என்ற துல்லிய ஒளிபரப்பு அலைவரிசையைக் கொண்டுள்ள அஸ்ட்ரோ நாளை புதன்கிழமை முதல் மேலும் இரண்டு புதிய துல்லிய ஒளிபரப்பு அலைவரிசைகளை (எச்.டி) தொடக்குகின்றது.

ஸீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் என அந்த இரண்டு அலைவரிசைகளும் தற்போது இந்தியாவில் இயங்கி வருகின்றன. அதன் உள்ளடக்கங்களைக் கொண்டு தொடங்கப்படவிருக்கும் இந்த இரண்டு புதிய அலைவரிசைகளும் இனி 232 (ஸீ தமிழ்) மற்றும் 233 (கலர்ஸ் தமிழ்) ஆகிய அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும். விண்மீண் தொடர்ந்து 231 அலைவரிசையில் ஒளிபரப்பாகி வரும்.

ஏற்கனவே, இந்தி நிகழ்ச்சிகளை அதிகமாகக் கொண்ட தாரா எச்டி என்ற அலைவரிசையும், பாலிஒன் என்ற அலைவரிசையும் துல்லிய ஒளிபரப்பில் அஸ்ட்ரோவில் ஒளிபரப்பாகி வருகின்றன.

#TamilSchoolmychoice

புதிய தமிழ் எச்டி அலைவரிசைகள் குறித்த விரிவான விளக்கங்களும், அறிவிப்புகளும் நாளை புதன்கிழமை காலை 11 மணியளிவில் அஸ்ட்ரோ மையத்தில் நடைபெறவிருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.