Home Video 21 இலட்சம் பார்வையாளர்களைத் தாண்டும் “கொரில்லா” குறுமுன்னோட்டம்

21 இலட்சம் பார்வையாளர்களைத் தாண்டும் “கொரில்லா” குறுமுன்னோட்டம்

1017
0
SHARE
Ad

சென்னை – அடுத்து வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “கொரில்லா”.

ஒரு குரங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் படத்திற்கான ஆர்வமும் எதிர்பார்ப்பும் இயல்பாகவே கூடியிருக்கிறது.

ஜீவா கதாநாயகனாக நடிக்க, ராதாரவி, யோகிபாபு, சதீஷ் ஷாலினி பாண்டே நடித்திருக்கும் இந்தப் படத்தின் குறு முன்னோட்டத்தைக் (டீசர்) கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி நடிகர் சூர்யா வெளியிட, சில நாட்களிலேயே இதன் பார்வையாளர் எண்ணிக்கை யூடியூப் தளத்தில் 21 இலட்சத்தையும் தாண்டிவிட்டது.

#TamilSchoolmychoice

பொதுவாக முன்னணி இயக்குநர்கள், உச்ச நட்சத்திரங்களின் முன்னோட்டங்களுக்குத்தான் இதுபோன்று சில நாட்களிலேலே இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.

அந்த வகையில் கொரில்லா முன்னோட்டத்திற்குக் கிடைத்திருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான வரவேற்பு படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்திருக்கிறது.

கொரில்லா படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: