ஷங்கர் இயக்கும் ‘ஐ‘ படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் மெக்சிகோ சென்றார்.
அங்குள்ள கடல்பகுதியில் டால்பின் மீனுடன் நீந்தினார். அது மிகவும் பிடித்துவிடவே அதை பராமரிக்கும் செலவை ஏற்பதாக கூறி தத்தெடுத்துக்கொண்டார். இது பற்றி எமி கூறியது:-
ஸ்முத்தி என்ற பெண் டால்பினை தத்தெடுத்திருக்கிறேன். மெக்சிகோ சென்றபோது அதனுடன் நீந்தும் வாய்ப்பு கிடைத்தது. அதன் அழகும், அறிவு திறனும் என்னை கவர்ந்தது.
கடற்கரை பகுதி முழுவதும் அதனுடன் இணைந்து நீந்தியது மறக்க முடியாது. அங்கிருக்கும் பராமரிப்பாளரிடம் பேசி அதை தத்தெடுத்துக்கொண்டேன்.
இம்முறை கோடை விடுமுறைக்கு செல்லும்போது மீண்டும் அதனுடன் சேர்ந்து நீந்துவேன். எனக்கு விலங்குகள் மீது எப்போதும் பாசம் உண்டு. இந்த மீனை தத்தெடுத்ததன் மூலம் அதன் அறக்கட்டளைக்கும் உதவுவதாக அமைந்தது.
கடந்த ஜனவரி முதல் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் ‘ஐ‘ படத்துக்காக தொடர்ந்து நடித்து வருகிறேன். சமீபத்தில் மும்பை சென்று சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.
‘ஐ‘ படத்துக்காக இன்னும் நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டி உள்ளது. இதற்கிடையில் தெலுங்கு படமொன்றில் ராம் சரணுடன் பாடல் காட்சியில் நடித்தேன். இவ்வாறு எமி ஜாக்ஸன் கூறினார்.