Home கலை உலகம் காதல் சோகத்தில் எமி ஜாக்ஸன்

காதல் சோகத்தில் எமி ஜாக்ஸன்

842
0
SHARE
Ad

emieசென்னை, ஏப்ரல் 16- மதராசப்பட்டினம் படத்துக்காக ஹாலிவுட் சினிமாவிலிருந்து கொலிவுட்டுக்கு வந்தவர் எமி ஜாக்ஸன்.

இதனையடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி பதிப்பில் நடித்தார். இந்தியில் நடித்த போது நாயகனாக நடித்த பிரதிக்கிற்கும், எமிக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இதனால் அப்படம் முடிந்து லண்டன் சென்ற எமி, பிரதிக்கை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி மும்பையில் முகாமிட்டார்.

#TamilSchoolmychoice

பிரதிக்கின் பெயரை தன் உடம்பிலும் பச்சை குத்திக் கொண்டார். ஆனால் தாண்டவம், ஐ படங்களைத் தொடர்ந்து எமி, முழுநேரமும் கொலிவுட்டில் தங்கிவிட்டார்.

அந்த இடைவெளியை பயன்படுத்தி மும்பையைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவரிடம் புதிய காதலை வளர்த்து விட்டாராம் பிரதிக்.

இந்த தகவலறிந்த எமி ஜாக்ஸன் அதிர்ச்சியடைந்திருப்பதோடு, பிரதிக்குடன் பழகிய நாட்களை மனதில் அசைப்போட்டபடி காதல் ஏக்கத்தில் தவிக்கிறாராம்.