Home கலை உலகம் பாலிவுட் நாயகனின் புது தோழி- எமி ஜாக்ஸன்

பாலிவுட் நாயகனின் புது தோழி- எமி ஜாக்ஸன்

801
0
SHARE
Ad

emie-jacsonசென்னை, ஏப்ரல் 10-கொலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நாயகன் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார் பால்வெள்ளை அழகி எமி ஜாக்ஸன்.

பாலிவுட் நடிகர் பிரதிக்குடன் எமியை இணைத்து பரபரப்பாக கிசுகிசுத்தது பட வட்டாரம். இருவரும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பில் இணைந்து நடித்தனர்.

சில சம்பவங்களால் நாளடைவில் பிரதிக் -எமி இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் குறைந்தது. அதன் பின்னர் பிரதிக், பாலிவுட் இளமை அழகியின் நட்பில் இணைந்திருப்பதால், ‘ஐ’ நாயகி எமி உஷ்ணமானவர் என்றும் கூறுகிறார்கள்.

#TamilSchoolmychoice

மும்பை இசை நிகழ்ச்சிக்காக ஆர்வமாக களமிறங்கிய பிரதிக்கும் பாலிவுட் புது நட்பு நாயகியும் நெருக்கமானதை அறிந்த எமி பிரதிக்குடன் பழகிய நாட்களை மறக்க முடியாமல் தவித்ததாக பட வட்டாரம் கூறுகிறது.

பிரதிக், எமி இருவரும் தங்களது பெயரை இணைத்து பச்சை குத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.