Home வாழ் நலம் உடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி

உடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி

1012
0
SHARE
Ad

tulasi

கோலாலம்பூர், ஏப்ரல் 16- எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம்.

ஆரோக்கியமாக வாழ துளசி  இலையை தினமும் தின்று வந்தால் குடல்,  வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

#TamilSchoolmychoice

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் உடலில் ஏற்பட்ட படைச்சொரி  மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு  தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை  தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம்  துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன்  குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள  குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.