Home உலகம் சீனப் பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வருகை

சீனப் பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வருகை

657
0
SHARE
Ad

leoபுதுடெல்லி, ஏப். 16-  பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டர்பன் நகருக்கு சமீபத்தில் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் லீ கியாங்-கை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கு வருகைதரும் படி சீனப் பிரதமரை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

அவரது அழைப்பை ஏற்று அடுத்த (மே) மாதம் 3வது வாரத்தில் சீனப் பிரதமர் இந்தியா வருகிறார்.

முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங் வரும் ஜுன் மாதம் சீனாவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. சீன பிரதமர் அடுத்த மாதம் இந்தியா வருவதையடுத்து, மன்மோகன் சிங்கின் சீனப் பயணம் இந்த ஆண்டின் இறுதியில் அமையும் வகையில் இந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.