Home உலகம் நெதர்லாந்து : 3 பேரைக் கொன்றவன் பிடிபட்டான்

நெதர்லாந்து : 3 பேரைக் கொன்றவன் பிடிபட்டான்

1281
0
SHARE
Ad

உட்ரெக்ட் – நெதர்லாந்து நாட்டின் உட்ரெக்ட் (Utrecht) நகரில் டிராம் எனப்படும் பயணிகள் இரயில் வண்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரைக் கொலை செய்த ஆடவன் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். இந்தத் தாக்குதலில் மேலும் ஐவர் காயமடைந்தனர்.

கோக்மென் தானிஸ் (Gokmen Tanis) என அடையாளம் காணப்பட்டிருக்கும் அந்த 37 வயது நபர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவனாவான். சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கட்டடத்தில் அந்நபர் பிடிபட்டான்.

அவன் நடத்திய தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

நெதர்லாந்து நாட்டின் உட்ரெக்ட் நகரின் டிராம் வண்டியில் நேற்று திங்கட்கிழமை காலை 10.45 மணியளவில் நபர் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டான் என்ற தகவல்களைத் தொடர்ந்து, தாக்குதல்காரனைத் தேடும் வேட்டையில் காவல் துறையினர் இறங்கினர்.

தாக்குதலைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டதோடு, விமான நிலையங்களிலும், பள்ளி வாசல்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. கண்காணிப்பு மறைக்காணிகள் மூலம் எடுக்கப்பட்ட தாக்குதல்காரனின் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை மாலை அந்தத் தாக்குதல்காரன் கைது செய்யப்பட்டான்.