Home உலகம் ஈரோ 2020 : செக் குடியரசு 2 – நெதர்லாந்து 0; நெதர்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த...

ஈரோ 2020 : செக் குடியரசு 2 – நெதர்லாந்து 0; நெதர்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த செக் குடியரசு

594
0
SHARE
Ad

புடாபெஸ்ட் (ஹங்கேரி) : ஈரோ 2020 ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் தற்போது நடைபெற்று வரும் 16 குழுக்களுக்கிடையிலான ஆட்டத்தில் செக் குடியரசு 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த நெதர்லாந்து குழுவைத் தோற்கடித்து காற்பந்து இரசிகர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு குழுக்களுக்கிடையிலான ஆட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 27-ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் மலேசிய நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்றது.

நெதர்லாந்தின் ஒரு விளையாட்டாளர் வெளியேற்றப்பட்டதால் 10 விளையாட்டாளர்களை மட்டுமே கொண்ட குழுவாக நெதர்லாந்து சுருங்கியது.

#TamilSchoolmychoice

நெதர்லாந்தைத் தோற்கடித்துள்ள செக் குடியரசு அடுத்து கால் இறுதி ஆட்டத்தில் டென்மார்க்கைச் சந்திக்கும்.

அடுத்த சுற்றுக்குத் தேர்வான 16 குழுக்கள்

மொத்தம் 24 நாடுகள் கலந்து கொண்ட ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அந்த நாடுகள் ஒரு பிரிவுக்கு 4 நாடு என்ற கணக்கில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 2 குழுக்கள் என்ற அளவில் 12 நாடுகள் 6 பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

மேலும் சிறந்த 3 இடத்தைப் பெற்ற 4 குழுக்களும் கூடுதலாகத் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட இந்த 16 குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் சனிக்கிழமை ஜூன் 26 முதல் தொடங்கின.

6 பிரிவுகளில் சிறந்த குழுக்களாகத் தேர்வு பெற்ற 6 நாடுகள் பின்வருமாறு:

  1. இத்தாலி
  2. பெல்ஜியம்
  3. நெதர்லாந்து
  4. இங்கிலாந்து
  5. சுவீடன்
  6. பிரான்ஸ்

6 பிரிவுகளில் சிறந்த 2-வது குழுவாகத் தேர்வான 6 நாடுகள் பின்வருமாறு:-

  1. வேல்ஸ்
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. குரோஷியா
  5. ஸ்பெயின்
  6. ஜெர்மனி

பிரிவுகளில் சிறந்த 3-வது குழுவாகத் தேர்வாகும் நாடுகள் :-

  1. சுவிட்சர்லாந்து
  2. செக் குடியரசு
  3. உக்ரேன்
  4. போர்ச்சுகல்

அடுத்து 16 குழுக்களுக்குள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு நடைபெறும்:

26/06: வேல்ஸ் – டென்மார்க் (நடைபெறும் இடம் ஆம்ஸ்டர்டாம்)

26/06: இத்தாலி – ஆஸ்திரியா (நடைபெறும் இடம் இலண்டன்)

27/06: நெதர்லாந்து – செக் குடியரசு (நடைபெறும் இடம் புடாபெஸ்ட்)

27/06: பெல்ஜியம் – போர்ச்சுகல் (நடைபெறும் இடம் செவில்)

28/06: குரோஷியா – ஸ்பெயின் (நடைபெறும் இடம் கோப்பன்ஹேகன்)

28/06: பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து (நடைபெறும் இடம் புச்சாரெஸ்ட்)

29/06: இங்கிலாந்து – ஜெர்மனி (நடைபெறும் இடம் இலண்டன்)

29/06: சுவீடன் – உக்ரேன் (நடைபெறும் இடம் கிளாஸ்கோ)