Home உலகம் துருக்கியப் பெண்மணி, நெதர்லாந்தின் பிரதமர் ஆவாரா? மாறும் ஐரோப்பிய அரசியல்!

துருக்கியப் பெண்மணி, நெதர்லாந்தின் பிரதமர் ஆவாரா? மாறும் ஐரோப்பிய அரசியல்!

253
0
SHARE
Ad

ஆம்ஸ்டர்டாம் : துருக்கிய – குர்திஷ் இனப் பெண்மணியான டிலான் யெசில்கோஸ் (DILAN YESILGOZ) நெதர்லாந்தின் அடுத்த பிரதமர் ஆவாரா என்ற எதிர்பார்ப்புடன் இன்று புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெறுகிறது நெதர்லாந்து பொதுத் தேர்தல்.

பிரதமராக இருக்கும் மார்க் ரூட்டுக்கு பதிலாக புதிய பிரதமர் இந்தத் தேர்தலின் வழி தேர்ந்தெடுக்கப்படுவார்

ஐரோப்பிய நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளில் அந்நிய நாட்டவர்களின் குடியேற்றங்களால் அந்தந்த நாடுகளின்  மக்கள் தொகையும்  இன ரீதியான விழுக்காடு மாற்றம் கண்டது.

#TamilSchoolmychoice

அரசியலிலும் ஈடுபட தொடங்கிய இந்த குடியேறிகள் பல நாடுகளில் முக்கிய பதவிகளுக்கு வந்துள்ளனர். போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரிட்டனின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

அந்த வரிசையில் நெதர்லாந்து நாட்டில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலில் போட்டியிடுபவர்களில் 46 வயது என்ற பெண்மணி டிலான் யெசில்கோஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மற்ற போட்டியாளர்களுடன் தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கும் அவர் வெற்றி பெற்றால் நெதர்லாந்து நாட்டின் முதலாவது பெண் பிரதமர் ஆவார்.  அவர் விவிடி என்ற  கட்சிக்கு தலைமை தாங்குகிறார்.

தற்போது அவர் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றுகிறார். கடுமையான உழைப்பாளியாக கருதப்படுகிறார் டிலான் யெசில்கோஸ். ஒரு முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், வேலையை தவிர தான் மூன்றே பணிகள் தான் செய்வதாக கூறினார். தூங்குவது, உடற்பயிற்சி செய்வது, நல்ல சுகாதாரமிக்க, சத்துள்ள உணவுகளை உட்கொள்வது ஆகியவைதான் அந்த மூன்று என அவர் கூறினார்.  அதற்கேற்ப அவர் அழகுடனும் இளமையான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார்.

பொதுத் தேர்தலில் களத்தில் நிற்கும் மற்ற கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்கள் ஃபிரான் டிம்மர்மான்ஸ், கீர்ட் வில்டர்ஸ், பீட்டர் ஓம்ட்சிக்ட் ஆகிய மூவராவர்.