Home உலகம் சிங்கப்பூர்: வாகன குற்றங்களுக்கான அபராதத்தை செலுத்தாமல் உள் நுழைய முடியாது!

சிங்கப்பூர்: வாகன குற்றங்களுக்கான அபராதத்தை செலுத்தாமல் உள் நுழைய முடியாது!

765
0
SHARE
Ad

சிங்கப்பூர்: நேற்று திங்கட்கிழமை, சிங்கப்பூருக்கு வேலைக் காரணமாக செல்ல இருந்த மலேசியர்கள் மோசமான போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். சிங்கப்பூரின் கோஸ்வே மற்றும் கெலாங் பாத்தா இரண்டாம் இணைப்பு நுழைவாயில்களில் இந்த நெரிசல் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து, வாகன நிறுத்தம் மற்றும் வாகன உமிழ்வு ஆகியவற்றிற்கான அபராதங்களைச் செலுத்தாத வாகனங்களை சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த மோசமான நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாகனம் சம்பந்தப்பட்ட குற்றங்களையும், அபராதத்தையும் பரிசோதிக்கவும், பணத்தை செலுத்தவும் வாகன ஓட்டிகளுக்கு முன்னதாக சிங்கப்பூர் அரசு அறிக்கை ஒன்றினை, கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டிருந்தது. அவ்வாறு செய்யத்தவறும் வாகனங்கள் சிங்கப்பூரில் நுழைய மறுக்கப்படலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

பிப்ரவரி மாதம் வரையிலும், வெளிநாட்டு வாகன ஓட்டுனர்கள் சுமார் 400,000 குற்றங்களுக்கு 96.35 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தாமல் இருப்பதாக சிங்கப்பூர் அறிவித்திருந்தது.