கோலாலம்பூர்: கல்விச் சேவைத்துறை ஆணைக்குழு (எஸ்பிபி) ஆட்சேர்ப்பு நடத்தப்படும் போது, எந்தவொரு இனம், நம்பிக்கை அல்லது பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு காலியான இடங்களை நிரப்புவதில்லை என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை, மலேசிய நண்பன் நாளிதழில் இந்தியர்களுக்கு போதுமான வாய்ப்புகள் தரப்படவில்லை எனும் குற்றச்சாட்டினை குறித்துப் பேசிய கல்வி அமைச்சு, அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு எனவும், ஆதாரமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
கல்வித் துறை சார்ந்த விவகாரங்களில் கல்வி அமைச்சும், கல்விச் சேவைத்துறை ஆணைக்குழுவும் தகுதியானவர்களை மட்டுமே அமர்த்துவதாகவும், இதில், இனம் மற்றும் மதம் ஆகியவவை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது எனவும் அது குறிப்பிட்டிருந்தது.
ஒருவரின் தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாக எஸ்பிபி தெரியப்படுத்தி உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.