Home இந்தியா திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வீட்டிலிருந்து 15 கோடி ரூபாய் பறிமுதல்!

திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வீட்டிலிருந்து 15 கோடி ரூபாய் பறிமுதல்!

865
0
SHARE
Ad

வேலூர்: வேலூரில் திமுக கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியபோது 15 கோடி ரூபாய் பணம் சாக்கு மூட்டைகளிலும், பெட்டிகளிலும் கட்டுக்கட்டாகக் பறிமுதல் செய்யப்பட்டது என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், அப்பகுதியில் தேர்தல் இரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை மட்டும், தமிழகத்தில் 78.12 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், அப்பணங்களில் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பணம் என்று குறிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துரைமுருகனுக்குச் சொந்தமான இடங்கள், கட்டிடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.