Home Video மீண்டும் இந்தித் திணிப்பா? வெகுண்டெழுந்த தமிழகம்! பின்வாங்கிய புதுடில்லி!

மீண்டும் இந்தித் திணிப்பா? வெகுண்டெழுந்த தமிழகம்! பின்வாங்கிய புதுடில்லி!

1032
0
SHARE
Ad

புதுடில்லி – பாஜக அரசாங்கம் பதவியேற்றவுடனேயே தமிழ் நாட்டிலிருந்து மொழிப் பிரச்சனை காரணமாக எதிர்ப்பலைகளை சம்பாதித்துள்ளது.

அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பரிந்துரை ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசாங்கம் நியமித்த குழு ஒன்று ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின்படி எல்லா மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், எல்லா மாநிலங்களிலும் இந்தியும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால், உடனடியாக தமிழகத்தில் இதற்கென எதிர்ப்புக் குரல்கள் உடனடியாக எழுந்தன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தக் கொள்கை அமுல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

தமிழகத்தின் பல தலைவர்களும் தங்களின் எதிர்ப்புகளை முழங்கினர். உடனடியாக வடநாட்டு தொலைக் காட்சி அலைவரிசைகளிலும் இதுகுறித்த விவாதங்கள் அரங்கேறத் தொடங்கின.

பொதுவாக அரசியல் விவகாரங்களில் கருத்து கூறாத ஏ.ஆர்.ரஹ்மான் கூட தமிழுக்கு ஆதரவாக ஒரு மறைமுக டுவிட்டர் பதிவைச் செய்திருக்கிறார்.

“தமிழ் பஞ்சாப் மாநிலத்திலும் பரவுகிறது” என நெத்தியடியாகப் பதிவிட்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், அதே பதிவில் பஞ்சாப்பின் சீக்கியப் பாடகரான ஜஸ்டீப் ஜோகி ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன” என்ற பாடலைத் தமிழில் பாடும் காணொளியைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மரியான்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம் பெற்ற பாடலாகும் இது!

தமிழ் நாட்டில் துளிர்விடத் தொடங்கிய கொந்தளிப்புகளைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கத்தின் பேச்சாளர்களும் அமைச்சர்களும் உடனடியாக ஊடகங்களிடம் “இது ஒரு குழுவின் பரிந்துரை மட்டுமே! இதனைச் செயல்படுத்தும் முடிவு எதனையும் அரசாங்கம் இதுவரை செய்யவில்லை. அரசாங்கம் இந்த பரிந்துரை குறித்து பரிசீலிக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தற்போதைக்கு சற்றே அடங்கியுள்ளது.