Home நாடு தைப்பூசத்திற்காக 4 நாட்கள் சிறப்பு தொடர் ரயில் சேவை

தைப்பூசத்திற்காக 4 நாட்கள் சிறப்பு தொடர் ரயில் சேவை

1098
0
SHARE
Ad

KTM-Train-Featureபத்துமலை, ஜனவரி 21 —– கடந்த 127 ஆண்டுகளாக தைப்பூசத்தை முன்னிட்டு ரயில் சேவையை வழங்கிவரும் கேடிஎம் நிறுவனம் (கெராத்தாப்பி தானா மெலாயு) இவ்வாண்டும், தைப்பூசத்திற்கு பத்துமலைக்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு முதல் முறையாக 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மூன்று இரவுகள் தொடர் ரயில் சேவையை வழங்கவிருப்பதாக அதன் வர்த்தகப்பிரிவின் உதவித்தலைவர் ஹாஜி ஸர்பினி திஜன் தெரிவித்தார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தைப்பூசத்திற்கு நாடெங்கிலுமிருந்து வருகை புரியும் லட்சக்கணக்கான பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களின் சிரமத்தைக்குறைக்கும் பொருட்டு கேடிஎம் இந்த தொடர்சேவையை வழங்கவிருப்பதாக ஸர்பினி  கூறினார்.

மேலும் அவர்  தெரிவிக்கையில் 194 ரயில்சேவைகள் அதிகரிக்கப்பட்டிருந்தாலும், டிக்கட் விலை எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம் போலவே இருக்கும் என்றார். இதர மாநிலத்தில் இருந்து வருபவர்க்கும் இது பொருந்தும் என்பதோடு அவர்கள் இரு வழிக்கும் ஒரே டிக்கட்டை பயன்படுத்தலாம் என்றார்.

#TamilSchoolmychoice

மேலும் பயணிகளின் சிரமத்தைக்குறைக்க கூடுதல் டிக்கட் முகப்பிடங்களும் அமைக்கப்படும் என உறுதி கூறினார்.

தைப்பூசத்தன்று பத்துமலையில் வாகன நெரிசலைத் தவிர்க்க மக்கள் வாகனங்களை கோலாலம்பூர் அருகில் இருக்கும் ரயில்நிலையங்களில் நிறுத்திவிட்டு கேடிஎம் ரயில் சேவையை பயன்படுத்தலாம் என அவர் ஆலோசனை கூறினார்.

இதனால் பணவிரயத்தையும்,போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கலாம் என்றார். பக்தர்களுக்கு உதவ, ‘உதவி’ என்ற டி. சட்டை அணிந்த கேடிஎம் பணியாட்களும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என ஸர்பினி திஜன் தெரிவித்தார்.