Home One Line P2 மலிண்டோ ஏர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சந்திரன் இராமமூர்த்தி

மலிண்டோ ஏர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சந்திரன் இராமமூர்த்தி

977
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டில் செயல்படும் மலிவு விலைக் கட்டண விமான நிறுவனமான மலிண்டோ ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இதுவரை பணியாற்றி வந்த சந்திரன் இராமமூர்த்தி (படம்) அந்தப் பொறுப்பிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயல் அதிகாரியாக கேப்டன் முஷாபிஸ் முஸ்தாபா பாக்ரி எதிர்வரும் செப்டம்பர் 23 முதல் பொறுப்பேற்கிறார்.

மலிண்டோ ஏர் நிறுவனத்தின் உரிமையாளரான லயன் குரூப் குழுமத்தில் தொடர்ந்து உயர் பதவியை சந்திரன் இராமமூர்த்தி வகித்து வருவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லயன் குரூப் நிறுவனங்களின் குழுமத்தின் வியூக இயக்குநராகப் பொறுப்பேற்கவிருக்கும் சந்திரன் அந்தக் குழுமத்தின் கீழ் இயங்கும் 5 விமான நிறுவனங்களை மேற்பார்வையிடும், வழிநடத்தும் பொறுப்பை இனி வகிப்பார்.

#TamilSchoolmychoice

தாய் லயன் ஏர் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தர இலாகாவின் இயக்குநராக இதுவரையில் கேப்டன் முஷாபிஸ் பணியாற்றி வந்தார்.