Home One Line P1 மலிண்டோ ஏர் நிர்வாகத்துடன் அரசாங்கம் சந்திப்பு நடத்தியுள்ளது

மலிண்டோ ஏர் நிர்வாகத்துடன் அரசாங்கம் சந்திப்பு நடத்தியுள்ளது

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலிண்டோ விமானம் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து இன்று மலிண்டோ ஏர் நிர்வாகத்துடன், மனிதவளத் துறை கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.

சொக்சோ ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த சந்திப்பு, தொழிலாளர் சட்டங்களுடன் இணங்குவது தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை கவனித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

தற்போது, ​​உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட மலிண்டோ ஏர் தொழிலாளர்கள் தங்கள் சுமையை குறைக்க வேலைவாய்ப்பு காப்பீட்டு முறைமையின் (எஸ்ஐபி) கீழ் ஆறு மாதங்கள் வரை வேலைவாய்ப்பு கொடுப்பனவு (ஈஎம்பி) உதவியை நாடலாம்.

#TamilSchoolmychoice

“இறுதி சம்பளத்தின் 80 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை, சம்பள வரம்பு 4,000 ரிங்கிட்டுக்கு கீழே வழங்கப்படும்” என்று அவர் இன்று மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேர அமர்வில் கூறினார்.