கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) கோலாலம்பூரிலிருந்து செங்சாவ் நகருக்குச் சென்ற விமானத்தில் அந்தப் பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டிருந்தனர். வுஹான் மாநிலத்தைத் தாக்கிய கொரனாவைரஸ் பீடித்திருந்த பயணி ஒருவரும் அதே விமானத்தில் பயணம் செய்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தகவல்களை இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட மலிண்டோ ஏர் நிறுவனம் நிலைமையைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து தங்களின் விமானப் பயணத்திற்கென வரும் பயணிகள் தாங்கள் பயணத்துக்கான உடல்நலத் தகுதி கொண்டவர்கள் என்ற சான்றிதழைக் காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதாகவும் மலிண்டோ ஏர் தெரிவித்தது.
கொரனாவைரஸ் முதலில் பரவிய வுஹான் நகர் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்வதாக ஏர் ஆசியா மற்றும் மலிண்டோ ஏர் நிறுவனங்கள் கடந்த ஜனவரி 23-இல் அறிவித்தன.
மலேசியாவில் இதுவரை நான்கு பேர்களுக்கு கொரனாவைரஸ் பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சீனாவின் குடிமக்களாவர்.