Home 13வது பொதுத் தேர்தல் பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டது!

பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டது!

761
0
SHARE
Ad

Lim Guan Engபினாங்கு, ஏப்ரல் 5 – பினாங்கு மாநில சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், இன்று காலை பினாங்கு மாநில ஆளுநர் துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸை சந்தித்து அனுமதி பெற்ற பின், பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இது பற்றி லிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பினாங்கு சட்டமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்படுகிறது. வார நாட்களில் வெள்ளிக்கிழமை தான் மிகவும் சிறப்பான நாள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் பொதுத்தேர்தல் எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, அமைதியான முறையில் நடைபெறவேண்டுமென்ற தனது விருப்பத்தையும் லிம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice